மத்திய சுகாதார மற்றும் குடும்பநலத் துறை அமைச்சர் டாக்டர் மான்சுக் மாண்டவ்யா 2021 ஆம் ஆண்டு CII ஆசிய சுகாதார உச்சி மாநாட்டில் பங்கேற்றார்.
இரண்டு நாட்கள் அளவிலான இந்த உச்சி மாநாட்டின் கருத்துரு, “சிறப்பான நாளைக்காக சுகாதார நலனை மாற்றியமைத்தல்” என்பதாகும்.
இந்தியத் தொழில்துறைக் கூட்டமைப்பானது, நோயாளிகளுக்குக் கிடைக்கும் பயன்கள் மற்றும் அத்துறையின் அனுபவங்களை மேம்பட்ட முறையில் வழங்கும் டிஜிட்டல் பரிமாற்றங்களின் மீதான சிறப்பு கவனத்துடன், சுகாதாரச் சேவையினை வழங்குவதில் இந்தியா மற்றும் உலக நாடுகள் எதிர்கொள்ளும் மிக முக்கியச் சவால்கள் குறித்து விவாதிப்பதற்கான ஒரு மையப்படுத்தப்பட்ட மன்றத்தினை வழங்குவதற்காக இந்த உச்சி மாநாட்டினை ஏற்பாடு செய்துள்ளது.
“தவாய் பி கதாய் பி” மற்றும் “தோ கஜ் கி தூரி, மஸ்க் ஹை சரூரி” போன்ற இயக்கங்கள் நாட்டின் மக்களை எவ்வாறு சென்றடைந்தன என்பது பற்றியும் நாட்டில் கோவிட்-19 தொற்றைக் கட்டுப்படுத்த அவை எவ்வாறு உதவியது என்பது பற்றியும் மத்திய அமைச்சர் இதில் குறிப்பிட்டார்.