CITES ஆனது உஸ்பெகிஸ்தானின் சமர்கண்டில் நடைபெற்ற, முக்கிய புதிய இனங்களின் பாதுகாப்பு குறித்த முடிவுகள் ஏற்றுக் கொள்ளப் பட்ட CoP20 மாநாட்டில் அதன் 50 ஆம் ஆண்டு நிறைவைக் கொண்டாடியது.
CITES (அழிந்துவரும் வன விலங்குகள் மற்றும் தாவரங்களின் சர்வதேச வர்த்தகம் குறித்த உடன்படிக்கை) என்பது உயிரினங்களைப் பாதுகாக்க வனவிலங்கு வர்த்தகத்தை ஒழுங்குபடுத்தும் ஓர் உலகளாவிய ஒப்பந்தமாகும்.
1963 ஆம் ஆண்டில் IUCN அமைப்பினால் உருவாக்கப்பட்ட இது, 1973 ஆம் ஆண்டில் கையெழுத்தாகி, 1975 ஆம் ஆண்டு ஜூலை 01 ஆம் தேதியன்று நடைமுறைக்கு வந்தது.
இந்த ஒப்பந்தம் 185 உறுப்பினர் நாடுகளைக் கொண்டுள்ளது (2025 ஆம் ஆண்டு நிலவரப் படி) மற்றும் வர்த்தக நிலைகளைக் கட்டுப்படுத்த மூன்று பின் இணைப்புகளைப் பயன்படுத்துகிறது.
CoP20 ஆனது, முதலாம் பின் இணைப்பில் சுறாக்கள், திருக்கை மீன்கள், கேலபோகஸ் உடும்புகள் மற்றும் ஆப்பிரிக்க ஊர்வன இனங்கள் உள்ளிட்ட 77 இனங்களைத் தன் பின்னிணைப்புகளில் சேர்த்தது.