CITES அமைப்பின் 19வது பங்குதாரர்கள் மாநாடு - செந்தலை கொண்ட செந்நிற ஓடு உடைய ஆமை
November 23 , 2022 955 days 404 0
பனாமாவில் CITES அமைப்பின் 19வது பங்குதாரர்கள் மாநாடானது (COP19) நடைபெற்றது.
அழிந்து வரும் வன விலங்குகள் மற்றும் தாவர உயிரினங்களில் மேற்கொள்ளப்படும் சர்வதேச வர்த்தகம் தொடர்பான உடன்படிக்கையானது வாஷிங்டன் மாநாடு என்றும் அழைக்கப் படுகிறது.
இது உலக வனவிலங்கு மாநாடு என்றும் அழைக்கப்படுகிறது.
அரசாங்கங்களுக்கிடையேயான ஒரு சர்வதேச ஒப்பந்தமான இதனை நடைமுறைப் படுத்துவதற்கான கடமையானது அதன் ஒப்பந்ததார நாடுகளின் மீது சட்டப் பூர்வமாக பிணைக்கப் பட்டுள்ளது.
வன விலங்குகள் மற்றும் தாவர இனங்களில் மேற்கொள்ளப்படும் சர்வதேச வர்த்தகம் ஆனது அந்த உயிரினங்களின் வாழ்வை அச்சுறுத்துவதில்லை என்பதை உறுதி செய்வதே இதன் நோக்கமாகும்.
இந்த CITES உடன்படிக்கையின் கீழ் செந்தலை கொண்ட செந்நிற ஓடு உடைய ஆமையின் (படகுர் கச்சுகா) பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக இந்தியா ஒரு முன் மொழிதலை முன்வைத்துள்ளது.
இது இந்தியா மற்றும் வங்காளதேசம் ஆகிய நாடுகளைப் பூர்வீகமாகக் கொண்ட ஒரு நன்னீர் வாழ் ஊர்வன இனமாகும்.