TNPSC Thervupettagam

CITES உடன்படிக்கையின் 50 ஆம் ஆண்டு நிறைவு

December 13 , 2025 10 days 76 0
  • CITES ஆனது உஸ்பெகிஸ்தானின் சமர்கண்டில் நடைபெற்ற, முக்கிய புதிய இனங்களின் பாதுகாப்பு குறித்த முடிவுகள் ஏற்றுக் கொள்ளப் பட்ட CoP20 மாநாட்டில் அதன் 50 ஆம் ஆண்டு நிறைவைக் கொண்டாடியது.
  • CITES (அழிந்துவரும் வன விலங்குகள் மற்றும் தாவரங்களின் சர்வதேச வர்த்தகம் குறித்த உடன்படிக்கை) என்பது உயிரினங்களைப் பாதுகாக்க வனவிலங்கு வர்த்தகத்தை ஒழுங்குபடுத்தும் ஓர் உலகளாவிய ஒப்பந்தமாகும்.
  • 1963 ஆம் ஆண்டில் IUCN அமைப்பினால் உருவாக்கப்பட்ட இது, 1973 ஆம் ஆண்டில் கையெழுத்தாகி, 1975 ஆம் ஆண்டு ஜூலை 01 ஆம் தேதியன்று நடைமுறைக்கு வந்தது.
  • இந்த ஒப்பந்தம் 185 உறுப்பினர் நாடுகளைக் கொண்டுள்ளது (2025 ஆம் ஆண்டு நிலவரப் படி) மற்றும் வர்த்தக நிலைகளைக் கட்டுப்படுத்த மூன்று பின் இணைப்புகளைப் பயன்படுத்துகிறது.
  • CoP20 ஆனது, முதலாம் பின் இணைப்பில் சுறாக்கள், திருக்கை மீன்கள், கேலபோகஸ் உடும்புகள் மற்றும் ஆப்பிரிக்க ஊர்வன இனங்கள் உள்ளிட்ட 77 இனங்களைத் தன் பின்னிணைப்புகளில் சேர்த்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்