TNPSC Thervupettagam

CLCS – TUS : நீட்டிப்பு

February 19 , 2019 2359 days 676 0
  • 12-வது ஐந்தாண்டு திட்டம் முடிவடைந்த பின்னரும் 2017-18 முதல் 2019-20 ஆம் ஆண்டு வரை கடனுடன் இணைக்கப்பட்ட மூலதன மானியம் மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டுத் திட்டத்தை (CLCS-TUS: Credit Linked Capital Subsidy and Technology Up-gradation Scheme) மேலும் மூன்று ஆண்டுகள் நீட்டிக்க பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு ஒப்புதல் வழங்கியுள்ளது.
  • இந்தத் திட்டமானது
    • சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான தொழில்நுட்ப மேம்பாடு
    • சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களினால் தயாரிக்கப்படும் பொருட்களின் தரத்தை மேம்படுத்துதல்
    • உற்பத்தித் திறனை உயர்த்துதல் மற்றும் வீணாவதைக் குறைத்தல்
    • தொடர்ந்து மேம்படுத்துதலுக்கான கலாச்சாரத்தை ஊக்குவித்தல்
ஆகியவற்றைக் கொண்டிருக்கும்.
  • இத்திட்டமானது அங்கீகரிக்கப்பட்ட 51 துணைத் துறைகள் / பொருட்களின் நன்கு நிறுவப்பட்ட மற்றும் மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்தை ஊக்குவிக்க 15 சதவிகித மூலதன மானியத்தை அளிக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்