தொழில்துறைப் பயன்பாடு மற்றும் ஏற்றுமதிக்கான நிலக்கரி இணைப்புகளை ஏலம் விடுவதற்கான CoalSETU கொள்கையை அரசாங்கம் அங்கீகரித்தது.
CoalSETU என்பது தடையற்ற, திறம் மிக்க மற்றும் வெளிப்படையான பயன்பாட்டிற்கான நிலக்கரி இணைப்பைக் குறிக்கிறது.
இந்தக் கொள்கை 2016 ஆம் ஆண்டின் ஒழுங்குபடுத்தப்படாத துறை (NRS) இணைப்பு ஏலக் கொள்கையில் ஒரு தனி சாளரத்தை உருவாக்குகிறது.
இந்தச் சாளரத்தின் கீழ் பெறப்பட்ட நிலக்கரியை சொந்த நுகர்வு, நிலக்கரித் தூய்மையாக்கம் அல்லது 50% வரை ஏற்றுமதிக்கு பயன்படுத்தலாம் ஆனால் அதனை இந்தியாவில் மறு விற்பனை செய்ய முடியாது.