அணுசக்தித் துறையானது (DAE) இரண்டு புதிய தொழில்நுட்பங்களை அறிவித்துள்ளது.
ColoNoX காயக் கட்டுத் துணி என்பது பாபா அணு ஆராய்ச்சி மையம் (BARC) உருவாக்கிய இந்தியாவின் முதல் நைட்ரிக்-ஆக்சைடு காயக் கட்டுத் துணி ஆகும்.
நீரிழிவு நோய் சார்ந்த கால் புண்களுக்கு (DFU) சிகிச்சையளிக்க இந்திய மருந்துக் கட்டுப்பாட்டுத் தலைமையகம் (DCGI) ColoNoX காயக் கட்டுத் துணியைப் பயன்படுத்த அங்கீகரித்துள்ளது.
ஃபெரோகார்பனேடைட் (BARC B1401) என்பது அருமண் தனிமக் கூறுகளுக்கான (REE) இந்தியாவின் முதல் சான்றளிக்கப்பட்ட குறிப்புப் பொருள் (CRM) ஆகும்.
இந்த CRM, பொருட்களின் கலவைப் பண்புகளுக்கான தேசிய மையம் (NCCCM) - BARC மற்றும் ஐதராபாத்தில் உள்ள அணு கனிம இயக்குநரகம் (AMD) ஆகியவற்றால் உருவாக்கப் பட்டது.
BARC B1401 ஆனது 13 அருமண் தனிமங்கள் (REE) மற்றும் 6 முக்கியத் தனிமங்களுக்கான சான்றளிக்கப்பட்ட மதிப்புகளைக் கொண்டுள்ளது என்பதோடு இது மேலும் சர்வதேச தரப்படுத்தல் அமைப்பின் (ISO) தரங்களைப் பின்பற்றுகிறது.