பெருங்கடல் சட்டம் மற்றும் கொள்கை குறித்த 48வது வருடாந்திர மாநாடு (COLP48) ஆனது புது டெல்லியில் நடைபெற்றது.
"Developing World Approaches to Ocean Governance: Perspectives from the Indian Ocean Rim" என்ற கருத்துருவின் கீழ் இந்த மாநாடு நடைபெற்றது.
சுமார் 50 ஆண்டுகளில் இந்தியா COLP மாநாட்டினை நடத்தியது இதுவே முதல் முறை ஆகும் என்பதோடு இது உலகளாவிய கடல் நிர்வாகத்தில் இந்தியாவின் பங்கில் ஒரு மைல்கல்லினைக் குறிக்கிறது.
நிலையான மீன்வளத் துறை, பிராந்திய ஒத்துழைப்பு, பாரம்பரிய அறிவை நவீன அறிவியலுடன் இணைத்தல், பருவநிலை நெகிழ்திறன் மற்றும் கடல் ஆராய்ச்சி மற்றும் நிர்வாகத்திற்கான புத்தாக்க நிதி ஆகியவை முன்னுரிமை செலுத்தப்படும் ஐந்து பகுதிகள் ஆகும்.