உயிரியல் பன்முகத் தன்மை தொடர்பான உடன்படிக்கையின் (CBD) 17வது பங்கு தாரர்கள் மாநாட்டின் அதிகாரப்பூர்வ முத்திரைச் சின்னத்தினை ஆர்மேனியா வெளியிட்டுள்ளது.
இந்த முத்திரைச் சின்னத்தில், ஆர்மேனியாவினைச் சேர்ந்த ஒரு வண்ணத்துப் பூச்சி இனமான எரிவன் அனோமலஸ் ப்ளூ (பாலியோமாட்டஸ் எரிவானென்சிஸ்) இடம் பெற்றுள்ளது.
இது ஆர்மேனியாவின் செந்நிறப் புத்தகத்தில் (2010) அருகி வரும் இனமாக பட்டியலிடப் பட்டுள்ளது, ஆனால் உலகளாவிய அல்லது ஐரோப்பிய IUCN செந்நிறப் பட்டியல்களில் சேர்க்கப்படவில்லை.
COP17 ஆனது 2026 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் ஆர்மேனியாவின் யெரெவனில் "Taking action for nature" என்ற கருத்துருவின் கீழ் நடத்தப்படும்.
குன்மிங்-மாண்ட்ரியல் உலகளாவிய பல்லுயிர் கட்டமைப்பின் 23 பல்லுயிர்ப் பெருக்க இலக்குகள் ஒன்றுக்கொன்று சார்ந்திருப்பதைக் குறிப்பதற்காக என இந்த முத்திரைச் சின்னம் 23 கலப்பு வண்ணங்களைப் பயன்படுத்துகிறது.