TNPSC Thervupettagam

COP17 முத்திரைச் சின்னம்

December 22 , 2025 4 days 75 0
  • உயிரியல் பன்முகத் தன்மை தொடர்பான உடன்படிக்கையின் (CBD) 17வது பங்கு தாரர்கள் மாநாட்டின் அதிகாரப்பூர்வ முத்திரைச் சின்னத்தினை ஆர்மேனியா வெளியிட்டுள்ளது.
  • இந்த முத்திரைச் சின்னத்தில், ஆர்மேனியாவினைச் சேர்ந்த ஒரு வண்ணத்துப் பூச்சி இனமான எரிவன் அனோமலஸ் ப்ளூ (பாலியோமாட்டஸ் எரிவானென்சிஸ்) இடம் பெற்றுள்ளது.
  • இது ஆர்மேனியாவின் செந்நிறப் புத்தகத்தில் (2010) அருகி வரும் இனமாக பட்டியலிடப் பட்டுள்ளது, ஆனால் உலகளாவிய அல்லது ஐரோப்பிய IUCN செந்நிறப் பட்டியல்களில் சேர்க்கப்படவில்லை.
  • COP17 ஆனது 2026 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் ஆர்மேனியாவின் யெரெவனில் "Taking action for nature" என்ற கருத்துருவின் கீழ் நடத்தப்படும்.
  • குன்மிங்-மாண்ட்ரியல் உலகளாவிய பல்லுயிர் கட்டமைப்பின் 23 பல்லுயிர்ப் பெருக்க இலக்குகள் ஒன்றுக்கொன்று சார்ந்திருப்பதைக் குறிப்பதற்காக என இந்த முத்திரைச் சின்னம் 23 கலப்பு வண்ணங்களைப் பயன்படுத்துகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்