பிரதமர் நரேந்திர மோடி, இந்திய நாட்டின் பருவநிலைச் செயல் திட்டமானது வகுக்கப் பட்டுள்ளதைக் குறிப்பிட்டு, 2070 ஆம் ஆண்டுக்குள் இந்தியா தனது நிகர பூஜ்ஜிய கார்பன் உமிழ்வு இலக்கை எட்டி விடும் என்று தெரிவித்தார்.
பருவநிலை மாற்றம் தொடர்பான பிரச்சனைகளைச் சமாளிப்பதற்கு "மிகவும் கடினமாக" உழைத்து வரும் இந்தியா ஐந்து உறுதிமொழிகள் அல்லது 'அமிர்த தத்வா' என்பதினைப் பூர்த்தி செய்யும் என பிரதமர் மோடி உலகிற்கு அறிவித்தார்.
உறுதிமொழி 1 - 2030 ஆம் ஆண்டுக்குள், இந்தியா தனது புதைபடிவம் சாராத எரிசக்தி திறனை 500 ஜிகா வாட்டாக உயர்த்தும்.
உறுதிமொழி 2 - 2030 ஆம் ஆண்டுக்குள், இந்தியா தனது ஆற்றல் தேவைகளில் 50 சதவீதத்தைப் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலம் பூர்த்தி செய்யும்.
உறுதிமொழி 3 - இந்தியா தற்போதைய ஆண்டு முதல் 2030 ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் மொத்த கார்பன் உமிழ்வுகளில் ஒரு பில்லியன் டன்கள் வரை குறைக்கும்.
உறுதிமொழி 4 - 2030 ஆம் ஆண்டுக்குள், இந்தியா தனது பொருளாதாரத்தில் நிலவும் கார்பன் தீவிரத்தை 45 சதவீதத்திற்கும் கீழே குறைக்கும்.
உறுதிமொழி 5 - 2070 ஆம் ஆண்டுக்குள் இந்தியா நிகர சுழிய உமிழ்வு என்ற இலக்கை அடையும்.