TNPSC Thervupettagam

COP31 பருவநிலை நிதிப் பணி திட்டம்

November 15 , 2026 6 hrs 0 min 52 0
  • துருக்கியின் அன்டால்யாவில் நடைபெற்ற COP31 மாநாட்டில் தனித்துவமான பருவநிலை நிதிப் பணி திட்டம் (CFWP) ஏற்றுக் கொள்ளப்பட்டது.
  • வளரும் நாடுகளுக்கு வளர்ந்த நாடுகள் பருவநிலை நிதியை வழங்க வேண்டும் என வலியுறுத்தும் பாரிஸ் ஒப்பந்தத்தின் சரத்து 9.1 குறித்து விவாதிப்பதற்கான தளத்தை இத்திட்டம் வழங்குகிறது.
  • 2024 ஆம் ஆண்டில் நடைபெற்ற COP29 மாநாட்டில் ஒப்புக்கொள்ளப்பட்ட புதிய கூட்டு அளவிடப்பட்ட இலக்கு (NCQG), 2035 ஆம் ஆண்டிற்குள் வளர்ந்த நாடுகளிடமிருந்து ஆண்டுதோறும் குறைந்தபட்சம் 300 பில்லியன் டாலர்களைத் திரட்டுவதையும், உலகளாவிய பருவநிலை நிதியை ஆண்டுதோறும் 1.3 டிரில்லியன் டாலர்களாக உயர்த்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • வளரும் நாடுகளுக்குக் பருவநிலை தகவமைப்புக்காக 2035 ஆம் ஆண்டிற்குள் ஆண்டுதோறும் சுமார் 305 பில்லியன் டாலர்கள் தேவைப்படுகிறது; ஆனால் 2024 ஆம் ஆண்டில் சர்வதேச பொதுத் தகவமைப்பு நிதியாக 28.2–31.7 பில்லியன் டாலர்கள் மட்டுமே கிடைத்துள்ளது.
  • தகவமைப்பு நிதியை மூன்று மடங்காக உயர்த்துவது மற்றும் பருவநிலை தொடர்பான வர்த்தக நடவடிக்கைகள் குறித்து தனித்தனி விவாதங்களை நடத்துவதற்கான முன்மொழிவுகள் கைவிடப்பட்டன; தகவமைப்பு நிதி குறித்த விவாதங்களுக்கு இந்தியா ஆதரவளித்திருந்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்