TNPSC Thervupettagam

COP31 மின்மயமாக்கல் முன்னெடுப்பு

November 16 , 2026 4 days 107 0
  • வளரும் நாடுகளில் தூய்மையான மின்மயமாக்கலை ஊக்குவிப்பதற்காக, துருக்கியின் அன்டால்யாவில் நடைபெற்ற 31-வது மாநாட்டில் (COP31) ‘மின்மயமாக்கல் நிதிக் கூட்டணி' (Electrify Now Finance Coalition) தொடங்கப்பட்டது.
  • தூய்மையான மின்சாரத்தில் முதலீட்டைத் திரட்டுவதற்காக அரசாங்கங்கள், வளர்ச்சி வங்கிகள் மற்றும் தனியார் நிதி நிறுவனங்களை இக்கூட்டணி ஒன்றிணைக்கிறது.
  • தூய்மையான மின்சாரம், மின் கட்டமைப்புகள் மற்றும் ஆற்றல் சேமிப்பு ஆகியவற்றிற்காக $1.2 பில்லியனுக்கும் அதிகமான தனியார் முதலீட்டைத் திரட்டும் வகையில், பருவநிலை முதலீட்டு நிதியம் (CIF) $94 மில்லியன் ஊக்குவிப்பு நிதியை அறிவித்துள்ளது.
  • உலகளாவிய மின்சாரத் தேவை வளர்ச்சியில் வளரும் பொருளாதாரங்கள் சுமார் 80% பங்கைக் கொண்டுள்ளன; அதேசமயம் ஆப்பிரிக்கா உலகளாவிய ஆற்றல் மாற்ற முதலீட்டில் சுமார் 2% மட்டுமே பெறுகிறது.
  • 2035 ஆம் ஆண்டிற்குள் இறுதி ஆற்றல் நுகர்வில் மின்சாரத்தின் பங்கை 23% இலிருந்து 35% ஆக உயர்த்துவதை COP31 உலகளாவிய மின்மயமாக்கல் உறுதிமொழி நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • 2027 ஆம் ஆண்டில் உலக வங்கி குழுமம் மற்றும் ஆப்பிரிக்க வளர்ச்சி வங்கி ஆகியவை இக்கூட்டணியின் முதல் இணைத் தலைவர்களாகப் பணியாற்றும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்