COP31 மாநாட்டின் போது மெக்சிகோ, பனாமா மற்றும் கம்போடியா ஆகிய நாடுகள் கருப்பு கார்பன் குறித்த துறைசார் நடவடிக்கைக்கான சக நாடுகள் வலையமைப்பில் (Peer Network on Sectoral Action on Black Carbon) இணைந்தன.
ஏற்கனவே உள்ள ஒன்பது உறுப்பு நாடுகளுடன் இந்த மூன்று நாடுகளும் இணைந்ததன் மூலம், இவ்வலையமைப்பின் உறுப்பினர் எண்ணிக்கை 12 நாடுகளாக உயர்ந்துள்ளது.
கரும்புகை என்றும் அழைக்கப்படும் கருப்பு கார்பன், புவி வெப்பமடைதலுக்குப் பங்களிக்கும் மற்றும் ஆஸ்துமா, நுரையீரல் நோய் போன்ற உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தும் ஒரு குறுகிய கால பருவநிலை மாசுபடுத்தியாகும்.
வீட்டு எரிசக்திப் பயன்பாடு, காட்டுத்தீ, கழிவுகளை எரித்தல், போக்குவரத்து மற்றும் கப்பல் போக்குவரத்து ஆகியவை இதன் முக்கிய ஆதாரங்களாகும்.
மெக்சிகோ தனது தேசிய அளவில் நிர்ணயிக்கப்பட்ட பங்களிப்பின் (NDC) கீழ் 2030 ஆம் ஆண்டிற்குள் கரும்புகை உமிழ்வை 51% குறைக்க இலக்கு நிர்ணயித்துள்ளது; பனாமா கனரக வாகனங்களை ஒரு முக்கிய ஆதாரமாக அடையாளம் கண்டுள்ளது.
COP31 மாநாட்டில், அதிதீவிர மாசுபடுத்திகளை (Super pollutants) கட்டுப்படுத்த 480 மில்லியன் அமெரிக்க டாலர்களும், தேசியத் திட்டங்களுக்காகக் கூடுதலாக சுமார் 25 மில்லியன் அமெரிக்க டாலர்களும் அறிவிக்கப்பட்டன.