CoreNet உலகளாவிய கல்வி சவால் 6.0 (குளோபல் Academic Challenge)
March 29 , 2021 1581 days 709 0
கரக்பூரிலுள்ள இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தைச் சேர்ந்த நான்கு இளங்கலை மாணவர்களைக் கொண்ட ஒரு அணியானது ‘CoreNet குளோபல் அகாடெமி சேலஞ்ச் 6.0’ என்ற போட்டியின் வெற்றியாளர்களாக உருவெடுத்து உள்ளனர்.
இப்போட்டி ‘கஷ்மேன் அண்ட் வேக்ஃபில்டு, KI மற்றும் IA : இன்டீரியர் ஆர்க்கிடெக்ட்ஸ்’ (Cushman and Wakefield, KI and IA: Interior Architects) ஆகிய நிறுவனங்களால் நடத்தப்பட்டது.
உலகெங்கிலுமிருந்து வந்த 1300 அணிகளில் இறுதிச் சுற்றுக்கு தேர்வான நான்கு அணிகளில் கரக்பூர் இந்தியத் தொழில்நுட்ப நிறுவனமும் ஒன்றாகும்.
மற்ற மூன்று அணிகள்
வாசிங்டன் பல்கலைக்கழகம்
நியூயார்க் பல்கலைக்கழகம்
டென்வெர் பல்கலைக்கழகம்
2015 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது முதல் இன்று வரைஇப்போட்டியில் வெற்றிப் பெற்ற முதல் இந்திய அணி இதுவேயாகும்.