TNPSC Thervupettagam

Country-by-Country அறிக்கைகள்

March 19 , 2019 2308 days 749 0
  • இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் ஏதாவது ஒரு நாட்டில் அமைந்துள்ள தாய் நிறுவனத்தினால் தாக்கல் செய்யப்பட்ட Country-by-Country அறிக்கைகளை இரு நாடுகளும் தற்பொழுது பரிமாறிக் கொள்ள முடியும்.
  • வருமான வரிச் சட்டத்தின் படி மற்ற நாடுகளில் செயல்படும் பன்னாட்டு நிறுவனங்களின் இந்தியத் துணை நிறுவனங்கள் எங்கிருந்து அவர்கள் செயல்படுகின்றார்களோ அதன் முக்கிய நிதி அறிக்கை விவரங்களை இந்தியாவிற்கு அளிக்க வேண்டும்.
  • இது போன்ற நிறுவனங்களின் செயல்பாட்டுத் திறனை சரிபார்ப்பதற்கு வருமான வரித் துறைக்கு இந்த விதி உதவுகிறது.
  • இது அடிப்படைத் தேய்மானம் மற்றும் இலாப மாற்று செயல் திட்டத்தின் (Base Erosion and Profit Shifting) ஒரு பகுதியாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்