இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி CoWin உலக மாநாட்டினைத் தொடங்கி வைத்து அதில் உரையாற்றினார்.
இந்த உலக மாநாட்டில் 142 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
இந்த மாநாடானது சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகம், வெளியுறவு விவகாரங்கள் அமைச்சகம் மற்றும் தேசிய சுகாதார ஆணையம் ஆகியவற்றால் இணைந்து நடத்தப்பட்டது.
இந்தியாவிலேயே உருவாக்கப்பட்ட தனது CoWin தளத்தினை அனைவருக்குமான ஒரு தளமாக மாற்றுவதற்கு இந்தியா முன்வந்துள்ளதால், இதன் மூலம் அனைத்து (எந்தவொரு) நாடுகளும் இதனைப் பயன்படுத்த இயலும்.