22வது காமன்வெல்த் நாடாளுமன்ற சங்கத்தின் (CPA) இந்திய பிராந்திய மண்டலம்-III மாநாடு ஆனது நாகாலாந்தில் நிறைவடைந்தது.
இரண்டு நாட்கள் அளவிலான இந்த மாநாடு "Policy, Progress & People: Legislatures as Catalysts of Change" என்ற கருப்பொருளின் கீழ் நடைபெற்றது.
விக்சித் பாரதம் 2047 (வளர்ச்சி பெற்ற இந்தியா) என்ற இலக்கினை அடைவதிலும் வட கிழக்கில் பருவநிலை மாற்றத் தாக்கங்களை நிவர்த்தி செய்வதிலும் சட்ட மன்றங்களின் பங்கு குறித்து இந்த மாநாட்டின் விவாதங்கள் கவனம் செலுத்தின.
இந்த மாநாட்டின் போது, CPA மன்றத்தின் III ஆம் இந்தியப் பிராந்திய மண்டலத்தின் உறுப்பினர்களால் ஒன்பது தீர்மானங்கள் ஏற்றுக் கொள்ளப் பட்டன.
22வது வருடாந்திர மாநாட்டின் முடிவைக் குறிக்கும் வகையில் மரம் நடும் இயக்கமும் நடத்தப்பட்டது.