TNPSC Thervupettagam

CPI அடிப்படை ஆண்டு – 2024

January 18 , 2026 4 days 55 0
  • 2012 ஆம் ஆண்டை அடிப்படை ஆண்டாகக் கொண்ட நுகர்வோர் விலைக் குறியீட்டு (CPI) தொடரை இந்தியா முடிவுக்கு கொண்டு வந்து 2024 ஆம் ஆண்டை அடிப்படை ஆண்டாகக் கொண்டு ஒரு புதிய CPI தொடரைத் தொடங்க உள்ளது.
  • தேசியப் புள்ளி விவரங்கள் அலுவலகம் (NSO) ஆனது 2025 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்கான இறுதி CPI தரவை 2012 என்ற அடிப்படை ஆண்டின் கீழ் வெளியிட்டது.
  • 2024 ஆம் ஆண்டை அடிப்படை ஆண்டாகக் கொண்ட புதிய CPI தொடர் அடுத்த மாதம் முதல் செயல்படுத்தப்படும்.
  • 2012 என்ற அடிப்படை ஆண்டின் கீழ், மொத்தப் பணவீக்கம் 2013 ஆம் ஆண்டு நவம்பரில் 11.16% ஆக மிக அதிகமாக இருந்தது.
  • இந்தத் தொடரின் கீழ் பதிவான மிகக் குறைந்த பணவீக்கம் 2025 ஆம் ஆண்டு அக்டோபரில் 0.25% ஆகும்.
  • அடிப்படை ஆண்டு மாற்றம் தற்போதைய நுகர்வு முறைகள் மற்றும் விலை நிலைகளை மிகவும் துல்லியமாக பிரதிபலிக்க உதவுகிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்