2012 ஆம் ஆண்டை அடிப்படை ஆண்டாகக் கொண்ட நுகர்வோர் விலைக் குறியீட்டு (CPI) தொடரை இந்தியா முடிவுக்கு கொண்டு வந்து 2024 ஆம் ஆண்டை அடிப்படை ஆண்டாகக் கொண்டு ஒரு புதிய CPI தொடரைத் தொடங்க உள்ளது.
தேசியப் புள்ளி விவரங்கள் அலுவலகம் (NSO) ஆனது 2025 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்கான இறுதி CPI தரவை 2012 என்ற அடிப்படை ஆண்டின் கீழ் வெளியிட்டது.
2024 ஆம் ஆண்டை அடிப்படை ஆண்டாகக் கொண்ட புதிய CPI தொடர் அடுத்த மாதம் முதல் செயல்படுத்தப்படும்.
2012 என்ற அடிப்படை ஆண்டின் கீழ், மொத்தப் பணவீக்கம் 2013 ஆம் ஆண்டு நவம்பரில் 11.16% ஆக மிக அதிகமாக இருந்தது.
இந்தத் தொடரின் கீழ் பதிவான மிகக் குறைந்த பணவீக்கம் 2025 ஆம் ஆண்டு அக்டோபரில் 0.25% ஆகும்.
அடிப்படை ஆண்டு மாற்றம் தற்போதைய நுகர்வு முறைகள் மற்றும் விலை நிலைகளை மிகவும் துல்லியமாக பிரதிபலிக்க உதவுகிறது.