பெங்களூரு அருகே உள்ள கோலாரைச் சேர்ந்த 38 வயது பெண் ஒருவர் மிகவும் அரிதான CRIB இரத்தக் குழுவைக் கொண்ட முதல் அறியப்பட்ட நபர் ஆவார்.
CRIB என்பது Chromosome Region Identified as Blood group (இரத்தக் குழுவாக அடையாளம் காணப்பட்ட குரோமோசோம் பிராந்தியம்) என்பதைக் குறிக்கிறது மற்றும் இது இந்திய அரிய ஆன்டிஜென் (INRA) அமைப்பின் ஒரு பகுதியாகும்.
இந்தப் புதிய இரத்தக் குழுவில் பொதுவான ஆன்டிஜென் இல்லாததால், இரத்த மாற்றம் மிகவும் சிக்கலானதாகவும், CRIB-எதிர்மறை இரத்தத்துடன் மட்டுமே மிகவும் இணக்கம் ஆனதாகவும் ஆக்குகிறது.
கர்ப்பக் காலத்தில் கரு மற்றும் பச்சிளம் குழந்தையின் இரத்தச் சிவப்பணு சிதைவு நோயைத் தடுப்பதில் CRIB முக்கியப் பங்கு வகிக்கிறது.
உலகளவில் 10க்கும் குறைவான CRIB இரத்தம் கொண்டவர்கள் பதிவானதாக அறியப் படுகின்றன என்ற ஒரு நிலையில் இது இன்று வரையில் அரிதான இரத்தக் குழுவாகக் கருதப்படுகிறது.