CSIRன் அணு காந்த ஒத்ததிர்வு பரிசோதனை - அமெரிக்காவின் USFDA சான்றிதழ்
December 10 , 2019 2163 days 728 0
ஹைதராபாத்தில் உள்ள அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வு மன்றம் – இந்திய வேதியியல் தொழில்நுட்ப நிறுவனமானது (CSIR - Indian Institute of Chemical Technology), அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் CSIRன் அணு காந்த ஒத்ததிர்வு பரிசோதனைக்கு (Nuclear Magnetic Resonance - NMR) அனுமதி அளித்துள்ளதாக அறிவித்துள்ளது.
தற்போதைய சிறந்த உற்பத்தி நடைமுறைகள் தொடர்பாக இந்த ஆய்வானது நடத்தப் பட்டது. இந்தச் சோதனையின் போது “எந்த நடவடிக்கையும் தொடங்கப்படவில்லை” என்று இதற்குச் சான்றிதழ் வழங்கப் பட்டது.
NMR
அணு காந்த ஒத்ததிர்வு என்பது ஒரு மாதிரியின் தூய்மை மற்றும் அதன் மூலக்கூறு அமைப்பு ஆகியவற்றைத் தீர்மானிப்பதற்காக உள்ள ஒரு பகுப்பாய்வு உத்தியாகும்.
அணுக் கருக்களைச் சுற்றியுள்ள உட்புற காந்தப் புலங்களைக் கண்காணிப்பதற்காக இந்த உத்தி பயன்படுத்தப் படுகின்றது.
உயிர் வேதியியலாளர்கள் புரதங்கள் மற்றும் பிற சிக்கலான மூலக்கூறுகளை அடையாளம் காண NMR உத்தியைப் பயன்படுத்துகின்றனர்.