TNPSC Thervupettagam

CSR மற்றும் சுற்றுச்சூழல் குறித்த உச்ச நீதிமன்றத் தீர்ப்பு

December 23 , 2025 4 days 67 0
  • பெருநிறுவன சமூகப் பொறுப்பு (CSR) என்பது சுற்றுச்சூழல் மற்றும் சூழலியல் பாதுகாப்பை இயல்பாகவே உள்ளடக்கியிருக்க வேண்டும் என்று இந்திய உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
  • சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கான CSR செலவினம் என்பது தொண்டு அல்ல, அது ஓர் அரசியலமைப்பு கடமை என்று நீதிமன்றம் கூறியது.
  • இந்தக் கடமை இந்திய அரசியலமைப்பின் 51A(g) ஆம் சரத்தின் கீழ் உள்ளது.
  • MK ரஞ்சித்சிங் & பிறர் மற்றும் இந்திய ஒன்றியம் இடையிலான வழக்கில் இந்தத் தீர்ப்பு வழங்கப் பட்டது.
  • இந்த வழக்கு அருகி வரும் பறவை இனமான கானமயில் (கிரேட் இந்தியன் பஸ்டர்டு) பறவைகளைப் பாதுகாப்பது தொடர்பானது ஆகும்.
  • தங்கள் செயல்பாடுகள் ஆனது வனவிலங்குகள் மற்றும் சுற்றுச்சூழல் அமைப்புகளுக்குத் தீங்கு விளைவித்தால் அதற்கான வளங்காப்புச் செலவுகளை நிறுவனங்கள் ஏற்க வேண்டும் என்று நீதிமன்றம் கூறியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்