CSR மற்றும் சுற்றுச்சூழல் குறித்த உச்ச நீதிமன்றத் தீர்ப்பு
December 23 , 2025 19 days 90 0
பெருநிறுவன சமூகப் பொறுப்பு (CSR) என்பது சுற்றுச்சூழல் மற்றும் சூழலியல் பாதுகாப்பை இயல்பாகவே உள்ளடக்கியிருக்க வேண்டும் என்று இந்திய உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கான CSR செலவினம் என்பது தொண்டு அல்ல, அது ஓர் அரசியலமைப்பு கடமை என்று நீதிமன்றம் கூறியது.
இந்தக் கடமை இந்திய அரசியலமைப்பின் 51A(g) ஆம் சரத்தின் கீழ் உள்ளது.
MK ரஞ்சித்சிங் & பிறர் மற்றும் இந்திய ஒன்றியம் இடையிலான வழக்கில் இந்தத் தீர்ப்பு வழங்கப் பட்டது.
இந்த வழக்கு அருகி வரும் பறவை இனமான கானமயில் (கிரேட் இந்தியன் பஸ்டர்டு) பறவைகளைப் பாதுகாப்பது தொடர்பானது ஆகும்.
தங்கள் செயல்பாடுகள் ஆனது வனவிலங்குகள் மற்றும் சுற்றுச்சூழல் அமைப்புகளுக்குத் தீங்கு விளைவித்தால் அதற்கான வளங்காப்புச் செலவுகளை நிறுவனங்கள் ஏற்க வேண்டும் என்று நீதிமன்றம் கூறியது.