CSR விதிகளின் அமலாக்கத்தை மதிப்பாய்வு செய்வதற்கான குழு
April 14 , 2018 2575 days 879 0
பெருநிறுவனங்கள் விவகாரத் துறை அமைச்சகமானது பெருநிறுவன சமூகப் பொறுப்புடைமையின் (Corporate Social Responsibility - CSR) விதிகளின் அமலாக்கத்தை மதிப்பாய்வு செய்வதற்காக 12 நபர்கள் கொண்ட குழுவை நிறுவனங்கள் சட்டம் 2013யின் படி அமைத்துள்ளது.
இதன் தலைவராக, பெருநிறுவனங்கள் மண்டல இயக்குநர் (மேற்கு மண்டலம்) மன்மோகன் ஜீனேஜா செயல்படுவார்.
மேலும், சட்ட மற்றும் தொழில்நுட்ப குழுக்கள் எனும் துணைக் குழுக்கள் CSR விதிகளுடன் இணங்கும் பல்வேறு அம்சங்களில் செயல்படும்.
நிறுவனங்கள் சட்டம் 2013ன் கீழ் குறிப்பிட்ட சில லாபகரமான நிறுவனங்கள், அவைகளின் மூன்று ஆண்டுகளின் வருடாந்திர சராசரி நிகர லாபத்தில் குறைந்தபட்சம் 2% -ஐ CSR செயல்பாடுகளுக்கு அளிக்க வேண்டும்.