February 19 , 2026
4 days
58
- இந்தியக் கடற்படை முதல் முறையாக ஒருங்கிணைந்தப் பணிக்குழு-154 (CTF-154) இன் தலைமையை ஏற்றுக் கொண்டுள்ளது.
- CTF-154 என்பது ஒருங்கிணைந்த கடல்சார் படைகளின் (CMF) கீழ் உள்ள ஒரு பன்னாட்டுப் பயிற்சி பணிக்குழு ஆகும்.
- பஹ்ரைனின் மனாமாவில் உள்ள CMF தலைமையகத்தில் தலைமை மாற்ற விழா நடைபெற்றது.
- பயிற்சி மற்றும் திறன் மேம்பாட்டுத் திட்டங்கள் மூலம் கடல்சார் பாதுகாப்பை வலுப் படுத்த CTF-154 மே 2023 இல் நிறுவப்பட்டது.
- CMF என்பது இந்தியப் பெருங்கடல் பகுதி மற்றும் அருகிலுள்ள கடல் பகுதிகளின் பாதுகாப்பிற்காகப் பணியாற்றும் 47 நாடுகளின் கடற்படைக் கூட்டாண்மை ஆகும்.
- இந்தப் பணிக்குழு கடல்சார் பாதுகாப்பு மேம்பாட்டுப் பயிற்சி மற்றும் திசையறிதல் மற்றும் தயார்நிலைப் பயிற்சிகள் போன்ற பயிற்சிகளை நடத்துகிறது.

Post Views:
58