TNPSC Thervupettagam

CTF-154 இன் இந்தியாவின் முதல் தலைமைத்துவம்

February 19 , 2026 4 days 57 0
  • இந்தியக் கடற்படை முதல் முறையாக ஒருங்கிணைந்தப் பணிக்குழு-154 (CTF-154) இன் தலைமையை ஏற்றுக் கொண்டுள்ளது.
  • CTF-154 என்பது ஒருங்கிணைந்த கடல்சார் படைகளின் (CMF) கீழ் உள்ள ஒரு பன்னாட்டுப் பயிற்சி பணிக்குழு ஆகும்.
  • பஹ்ரைனின் மனாமாவில் உள்ள CMF தலைமையகத்தில் தலைமை மாற்ற விழா நடைபெற்றது.
  • பயிற்சி மற்றும் திறன் மேம்பாட்டுத் திட்டங்கள் மூலம் கடல்சார் பாதுகாப்பை வலுப் படுத்த CTF-154 மே 2023 இல் நிறுவப்பட்டது.
  • CMF என்பது இந்தியப் பெருங்கடல் பகுதி மற்றும் அருகிலுள்ள கடல் பகுதிகளின் பாதுகாப்பிற்காகப் பணியாற்றும் 47 நாடுகளின் கடற்படைக் கூட்டாண்மை ஆகும்.
  • இந்தப் பணிக்குழு கடல்சார் பாதுகாப்பு மேம்பாட்டுப் பயிற்சி மற்றும் திசையறிதல் மற்றும் தயார்நிலைப் பயிற்சிகள் போன்ற பயிற்சிகளை நடத்துகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்