கொச்சின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் (CUSAT) மற்றும் ஸ்ரீ சித்திர திருநாள் மருத்துவ அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் (SCTIMST) நடத்திய ஆய்வில், நடுக்கு வாத நோய் (பார்கின்சன்) உள்ளவர்களுக்கும் ஆரோக்கியமான நபர்களுக்கும் இடையே குடல் பாக்டீரியாக்களில் வேறுபாடுகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
நோயாளிகளிடம் வீக்கத்துடன் தொடர்புடைய பாக்டீரியாக்களின் அளவு அதிகமாக இருப்பதையும், குறுகிய சங்கிலி கொழுப்பு அமிலங்களை உற்பத்தி செய்யும் பாக்டீரியாக்களின் அளவு குறைவாக இருப்பதையும் இந்த ஆய்வு கண்டறிந்துள்ளது.
பியூட்டிரேட், அசிடேட் மற்றும் ப்ரோபியோனேட் போன்ற குறுகிய சங்கிலி கொழுப்பு அமிலங்கள் (SCFAs) குடல் புறணியை பராமரிக்கவும் நோய் எதிர்ப்பு சக்தியை சீராக்கவும் உதவுகின்றன.
வைட்டமின் பி2 (ரைபோஃப்ளேவின்) மற்றும் வைட்டமின் பி7 (பயோட்டின்) உற்பத்தியுடன் இணைக்கப்பட்ட நுண்ணுயிர் மரபணுக்கள் குறைந்துள்ளதாகவும் இந்த ஆய்வு தெரிவித்துள்ளது.
நடுக்கு வாத (பார்கின்சன்) நோயானது முக்கியமாக சப்ஸ்டான்ஷியா நிக்ராவில் டோபமைன் உற்பத்தி செய்யும் நியூரான்களின் இழப்பை உள்ளடக்கியது.