TNPSC Thervupettagam
September 9 , 2026 4 days 98 0
  • ஊழல் கண்காணிப்பு ஆணையம் (CVC) தனது 2025 ஆம் ஆண்டிற்கான ஆண்டறிக்கையை வெளியிட்டது, இதில் மத்திய புலனாய்வு அமைப்பு (CBI) விசாரித்த 7,200க்கும் மேற்பட்ட ஊழல் வழக்குகள் விசாரணை நிலுவையில் உள்ளதாக சுட்டிக் காட்டப் பட்டுள்ளது.
  • மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையச் சட்டம், 2003-இன் பிரிவு 14 இன் கீழ் இந்த அறிக்கை CVC-ஆல் தயாரிக்கப்பட்டு இந்தியக் குடியரசுத் தலைவரிடம் சமர்ப்பிக்கப் படுகிறது.
  • குடியரசுத் தலைவர் இந்த அறிக்கையை நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் சமர்ப்பிக்க ஏற்பாடுகளைச் செயல்படுத்துவார்.
  • CVC அமைப்பானது, மத்திய ஊழல் கண்காணிப்பு அமைப்பு ஆணையச் சட்டம், 2003-இன் கீழ் இயங்குகிறது, இது அதற்கு சட்டப்பூர்வ அந்தஸ்தை வழங்குகிறது மற்றும் அதன் அதிகாரங்கள் மற்றும் பணிகளை வரையறுக்கிறது.
  • ஊழல் தடுப்புச் சட்டம், 1988-இன் கீழ் வரும் குற்றங்கள் தொடர்பான வழக்குகளில் CBI மீது CVC கண்காணிப்பு அதிகாரம் செலுத்துகிறது.
  • சந்தானம் குழுவின் பரிந்துரையின் பேரில் 1964 ஆம் ஆண்டில் CVC நிறுவப்பட்டது மற்றும் 2003 ஆம் ஆண்டில் சட்டப்பூர்வ அமைப்பாக மாறியது.
  • CBI தண்டனை விகிதம் 2024 ஆம் ஆண்டில் 69.14% இலிருந்து 2025 ஆம் ஆண்டில் 71.71% ஆக உயர்ந்துள்ளது.
  • CBI-இல் அனுமதிக்கப்பட்ட 7,300 பணியிடங்களில் 1,088 காலிப் பணியிடங்கள் இருந்தன.
  • ஊழல் தடுப்புச் சட்டம், 1988-இன் பிரிவு 17A, அரசு ஊழியர்களின் சில அதிகாரப்பூர்வ முடிவுகள் அல்லது பரிந்துரைகளை விசாரிப்பதற்கு முன் முன்அனுமதி பெற வேண்டும் என்று கட்டாயமாக்குகிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்