காசநோய் (TB) தொற்றைக் கண்டறிந்து சிகிச்சையளிப்பதற்காக என்று கேரளா Cy-TB எனப்படும் புதிய தோல் பரிசோதனையை அறிமுகப்படுத்தியுள்ளது.
காசநோய் தொற்று ஆனது பாதிப்பில் உள்ள காசநோய் பாதிப்பிலிருந்து வேறுபட்டது.
காசநோய் தொற்று உள்ள ஒருவர் தமது உடலில் காசநோய் தொற்றை ஏற்படுத்தும் உயிரினத்தை (மைக்கோபாக்டீரியம் காசநோய்) கொண்டுள்ளார்.
ஆனால் அந்த உயிரினம் உடலில் செயலற்றதாக இருக்கும் என்பதோடு மேலும் அந்த நபருக்கு எந்த காசநோய் அறிகுறிகளும் இருக்காது அல்லது அவர் தொற்றினைப் பரப்பவும் மாட்டார்.
இருப்பினும், சிகிச்சையளிக்கப் படாவிட்டால், இவர்களில் 5-10% பேரின் நிலை உடலின் நோய் எதிர்ப்பு சக்தி பலவீனமடையும் போது செயலில் உள்ள காசநோய் பாதிப்பினை உருவாக்கும் நிலைக்கு முன்னேறும், இதனால் காசநோய் பாக்டீரியா தொற்று ஏற்பட வாய்ப்பு ஏற்படும்.