TNPSC Thervupettagam

D வாக்காளர்கள் – அஸ்ஸாம் தேசியக் குடிமக்கள் பதிவேடு குறித்த பிரச்சினைகள்

August 22 , 2019 2092 days 740 0
  • இறுதி தேசியக் குடிமக்கள் பதிவேடு வெளியிடுவதற்கு சில நாட்கள் இருக்கும் வேளையில், அப்பதிவேட்டிலிருந்து நீக்கப்பட்டவர்களை D வாக்காளர்களாக அறிவிக்கப்பட வேண்டுமா என்ற சட்டப்பூர்வ பிரச்சனையை இந்தியத் தேர்தல் ஆணையம் தற்பொழுது எதிர் கொண்டுள்ளது.
  • நம்பத்தகாத அல்லது சந்தேகத்திற்கிடமான வாக்காளர்கள் என்று அழைக்கப்படுகின்ற D வாக்காளர்கள் அஸ்ஸாமில் உள்ள ஒரு வகையைச் சேர்ந்த வாக்காளர்கள் ஆவர். இவர்களின்  குடியுரிமை சந்தேகத்திற்கிடமான அல்லது பிரச்சினைக்குரியதாக இருக்கின்றது.
  • இந்த வகையானது 1997 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது.
  • இத்தகைய வாக்காளர்களின் வழக்கானது, அயல்நாட்டுத் தீர்ப்பாயத்தினால் முடிவு செய்யப்படும் வரை இவர்கள் தேர்தல்களில் பங்கேற்க முடியாது.
  • தற்பொழுது நிறைவு பெற்ற மக்களவைத் தேர்தலில் ஏறத்தாழ 1.2 இலட்ச D வாக்காளர்கள் தேர்தலில்  கலந்து கொள்ளவில்லை.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்