January 21 , 2021
1582 days
713
- ஐக்கிய இராஜ்ஜியமானது இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகளை ”விருந்தினர் நாடுகளாக” G7 மாநாட்டில் கலந்து கொள்ள அழைப்பு விடுத்து உள்ளது.
- ஒரு நாடு G7 அமைப்பில் உறுப்பு நாடாக வேண்டுமெனில், அந்த நாடு அதிக நிகர தேசிய வளம் மற்றும் உயர் மனித மேம்பாட்டுக் குறியீடு ஆகியவற்றைக் கட்டாயம் கொண்டிருக்க வேண்டும்.
- இது ஐக்கிய இராஜ்ஜியத்தில் ஜுன் மாதத்தில் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
- D10 குழுவானது G7 அமைப்பில் உள்ள அனைத்து நாடுகளையும் சேர்த்து கூடுதலாக இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகளையும் கொண்டு இருக்கும்.
- D10 என்பது உலகில் உள்ள 10 மிகப்பெரிய ஜனநாயக நாடுகள் என்பதைக் குறிக்கின்றது.
- G7 ஆனது 1975 ஆம் ஆண்டில் அமைக்கப் பட்டது.
- அமெரிக்கா, கனடா, ஜெர்மனி, பிரான்சு, ஜப்பான், இத்தாலி, ஐக்கிய இராஜ்ஜியம் ஆகியவை இதில் உறுப்பு நாடுகளாக உள்ளன.
- ரஷ்யாவானது 1998 ஆம் ஆண்டில் இந்தக் குழுவில் உறுப்பு நாடாக அதிகாரப் பூர்வமாக இணைத்துக் கொள்ளப் பட்டது.
- இதன் மூலம் G7 ஆனது G8 ஆக மாறியது.
- எனினும் 2014 ஆம் ஆண்டில் ரஷ்யாவானது தனது துருப்புகளை கிழக்கு உக்ரைனுக்கு அனுப்பி கிரிமியாவைக் கைப்பற்றியதால் இதர G8 நாடுகள் ரஷ்யாவைக் கடுமையாக விமர்சித்தன.
- இதன் மூலம் 2014 ஆம் ஆண்டில் G8 ஆனது மீண்டும் G7 ஆக மாறியது.

Post Views:
713