உலகிலேயே முதன்முறையாக ஒரு ‘செயற்கை நுண்ணறிவு’ அமைப்பிற்கு தென் ஆப்பிரிக்க நாடு காப்புரிமையினை வழங்கியுள்ளது.
இந்த காப்புரிமையானது பின்ன வடிவியல் அடிப்படையிலான உணவுக் கொள்கலனுடன் (food container based on fractal geometry) தொடர்புடைய DABUS எனும் செயற்கை நுண்ணறிவு அமைப்பிற்கு வழங்கப்பட்டுள்ளது.
DABUS என்பது (Device for the autonomous boot strapping of Unified Sentience) ஸ்டீபன் தாலேர் என்பவரால் உருவாக்கப்பட்ட ஒரு செயற்கை நுண்ணறிவு அமைப்பாகும்.