அந்தமான் மற்றும் நிக்கோபர் கட்டுப்பாட்டகமானது (ANC - Andaman and Nicobar Command) 2019 ஆம் ஆண்டின் அந்தமான் மற்றும் நிக்கோபர் தீவுகள் பாதுகாப்புப் பயிற்சியின் (DANX-19) இரண்டாவது பதிப்பை நடத்தியது. இது ஒரு பெரிய அளவிலான கூட்டு சேவைப் பயிற்சியாகும்.
இந்திய ராணுவம், கடற் படை, விமானப் படை மற்றும் கடலோர காவல் படை ஆகியவற்றின் படைப் பிரிவுகள் அணி திரட்டல் மற்றும் படைத் துறை நடவடிக்கைகளை மேற்கொண்டன.
புதிதாக உருவாக்கப்பட்ட ஆயுதப் படை சிறப்பு நடவடிக்கைப் பிரிவின் (AFSOD - Armed Forces Special Operations Division - AFSOD) சிறப்புப் படைகளும் இந்த பதிப்பில் பங்கேற்றன.
ANC பற்றி
அந்தமான் மற்றும் நிக்கோபர் கட்டுப்பாட்டகம் ஆனது இந்திய ஆயுதப் படைகளின் முதலாவது மற்றும் ஒரே முத்தரப்பு சேவை கட்டுப்பாட்டகமாகும். இது அந்தமான் மற்றும் நிக்கோபர் தீவுகளில் உள்ள போர்ட் பிளேயரில் அமைந்துள்ளது.