255 கி.மீ நீளமுள்ள தர்புக்-ஷியோக்-தெளலத் பெக் ஓல்டி (DS-DBO - Darbuk-Shyokh-Daulat Beg Oldie) என்ற அனைத்து வானிலைக்கும் ஏற்ற சாலை நிர்மாணிக்கப்படுவது என்பதற்கான உடனடிக் காரணம் இந்திய ராணுவத்திற்கும் சீன ராணுவத்திற்கும் இடையிலான மோதலே ஆகும் என்று கூறப்படுகிறது.
பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் எல்லைச் சாலைகள் அமைப்பால் கட்டப்பட்ட இந்தச் சாலையானது உண்மையான கட்டுப்பாட்டுக் கோட்டிற்குக் கிட்டத்தட்ட இணையாகச் செல்கின்றது. மேலும் இது லே பகுதியை DBO பகுதியுடன் இணைக்கிறது.
லடாக்கில் இருந்து இந்தியப் பகுதியின் வடக்கு திசையின் எல்லையில் டி.பி.ஓ பகுதி உள்ளது.
இது உலகின் மிக உயர்ந்த விமான ஓடுதளத்தைக் கொண்டுள்ளது. இது முதலில் 1962 ஆம் ஆண்டுப் போரின் போது கட்டப்பட்டது.
2008 ஆம் ஆண்டில், இந்திய விமானப் படையானது உண்மையான கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியுடன் சேர்த்து மிகுந்த அளவில் இருக்கும் தனது மேம்பட்ட இறங்குதள மைதானங்களில் ஒன்றாக இதை மேம்படுத்திப் புதுப்பித்தது.