ஃபினான்சியஸ் டைம்ஸ் பத்திரிக்கையின் வெளியீடான தி பேங்கர் எனும் இதழால் டிஜிட்டல் வங்கிச் சேவையில் மிகவும் புதுமைமிக்க வங்கிக்கான ஒரு உலகளாவிய வெற்றியாளராக DBS வங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.
ஆசிய-பசிபிக் பகுதியின் வெற்றியாளராகவும் அங்கீகரிக்கப்பட்டுள்ள இந்த வங்கியானது அதன் பாதுகாப்பான அணுகல் முறை மற்றும் தொலை உணர்வுச் செயல்பாட்டுத் தீர்வுகள் ஆகியவற்றிற்காக இணையவழிப் பாதுகாப்புப் பிரிவிலும் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டுள்து.
யூரோமணி பிராந்திய விருது விழாவில் DBS வங்கியானது ஆசியாவின் சிறந்த வங்கி எனவும் ஆசியாவின் சிறந்த டிஜிட்டல் வங்கி எனவும் குறிப்பிடப்பட்டது.