தில்லி துணை நிலை ஆளுநரான அனில் பைஜால் தில்லி பேரிடர் மேலாண்மை ஆணையத்திற்கு (DDMA - Delhi Disaster Management Authority) அறிவுறுத்தல்களை வழங்குவதற்காக ஒரு வல்லுநர் ஆலோசகக் குழுவை அமைத்துள்ளார்.
பேரிடர் மேலாண்மைச் சட்டம், 2005 என்ற சட்டமானது தேசிய, மாநில, மாவட்ட அளவில் பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் விரிவான சட்டப்பூர்வச் செயல் திட்டங்களை வழங்குகின்றது.
மாநிலப் பேரிடர் மேலாண்மை ஆணையமானது மாநில முதலமைச்சரால் தலைமை தாங்கப் படுகின்றது.
ஆனால் தில்லியைப் பொறுத்தவரை, தில்லி துணைநிலை ஆளுநர் தில்லி பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் தலைவர் ஆவார். தில்லியின் முதலமைச்சர் இந்த ஆணையத்தின் துணைத் தலைவர் ஆவார்.