இந்திய இராணுவமானது DIME எனப்படும் புதிய டிஜிட்டல் தளவாடத் தளத்தை அறிமுகப்படுத்தியது.
DIME என்பது நிலைய ஒருங்கிணைப்பு மேலாண்மை பதிப்பைக் குறிக்கிறது.
இது தளவாட மேலாண்மையை நவீனமயமாக்குவதற்கும் நெறிப்படுத்துவதற்கும் தொடங்கப் பட்ட ஒரு இந்தியா முழுவதுமான இராணுவ டிஜிட்டல் தளமாகும்.
இந்தத் தளம் ஓர் அலகு மட்டத்திலிருந்து இராணுவ தலைமையகம் வரையிலான தளவாடச் சொத்துக்களின் நிகழ்நேரத் தெரிவுநிலையை வழங்குகிறது.
DIME ஆனது இந்திய இராணுவம் மற்றும் BISAG-N (பாஸ்கராச்சார்யா தேசிய விண்வெளிப் பயன்பாடுகள் மற்றும் புவியிடத் தகவல் நிறுவனம்) ஆகியவற்றினால் இணைந்து உருவாக்கப்பட்டது.
இது தரப்படுத்தப்பட்ட டிஜிட்டல் பணிகளைப் பயன்படுத்திக் கிடங்குகள் மற்றும் அமைப்புகளுக்கு இடையே தளவாடத் தரவை ஒருங்கிணைக்கிறது.
இந்தத் தளம் காகித வேலைகளை சுமார் 70% குறைப்பதையும், தளவாடச் சுழற்சியை கிட்டத் தட்ட மூன்றில் ஒரு பங்காகக் குறைப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.