இந்தியாவின் ஜவுளித் துறையில் உள்ளடக்கிய மற்றும் நிலையான வளர்ச்சியை ஊக்குவிப்பதற்காக ஜவுளி அமைச்சகம் ஆனது, மாவட்ட தலைமையிலான ஜவுளித் துறை பரிமாற்ற (DLTT) முன்னேடுப்பினைத் தொடங்கியுள்ளது.
இந்தத் திட்டமானது, 100 உயர் திறன் கொண்ட மாவட்டங்களை உலகளாவிய ஏற்றுமதி சாம்பியன்களாக மாற்றுவதையும், 100 இலட்சிய நோக்கமிக்க மாவட்டங்களை சுய சார்பு மையங்களாக உருவாக்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
ஏற்றுமதி செயல்திறன், MSME நிறுவன சூழல் அமைப்பு மற்றும் பணியாளர் இருப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தரவு சார்ந்த மதிப்பிடல் முறையைப் பயன்படுத்தி மாவட்டங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன.
சாம்பியன் மாவட்டங்கள் மாபெரும் பொது வசதி மையங்கள் (CFC), தொழில்துறை 4.0 ஒருங்கிணைப்பு மற்றும் நேரடி ஏற்றுமதி சந்தை இணைப்புகள் மூலம் மேம்படுத்துதல் மற்றும் நுட்பப் படுத்தலில் கவனம் செலுத்துகின்றன.
இலட்சிய நோக்க மிக்க மாவட்டங்கள் அடிப்படைத் திறன் மேம்பாடு, மூலப்பொருள் வங்கிகள் மற்றும் சுய உதவிக் குழுக்கள் (SHG) மற்றும் கூட்டுறவுகள் மூலம் நுண் நிறுவனங்களை மேம்படுத்துதல் ஆகியவற்றுடன் அடித்தளத்தை உருவாக்குவதில் கவனம் செலுத்துகின்றன.
இந்த முன்னெடுப்பு பழங்குடியினர் மேம்பாடு, இணைப்பு மற்றும் கைவினைப் பொருட்களின் புவிசார் குறியீடு (GI) வழங்கீட்டினை ஆதரிப்பதுடன் கிழக்கு மற்றும் வட கிழக்கு மண்டலங்களில் பூர்வோதயா ஒருங்கிணைப்பை வலியுறுத்துகிறது.
இந்தத் திட்டம் ஜவுளித்துறை குழுக்களை வலுப்படுத்தவும், அரசு-தொழில்துறை-கல்வித் துறை ஒத்துழைப்பு மூலம் மாவட்டங்கள் முழுவதும் வெற்றிகரமான மாதிரிகளைப் பிரதிபலிக்கவும் முயல்கிறது.