இந்தியாவை ஒரு வளர்ந்த பொருளாதாரமாக மாற்றுவதற்கான 'DPI@2047' என்ற வழி காட்டுதல்களை நிதி ஆயோக் வெளியிட்டுள்ளது.
சுதந்திரத்தின் 100-வது ஆண்டைக் குறிக்கும் 2047-ஆம் ஆண்டிற்குள் $30 டிரில்லியன் பொருளாதாரம் மற்றும் $18,000 தனிநபர் வருமானம் என்ற இலக்கை இத்திட்டம் கொண்டுள்ளது.
அனைத்து துறைகளிலும் உள்ளடக்கிய வளர்ச்சி, கண்டுபிடிப்பு, உற்பத்தித்திறன் மற்றும் பெரிய அளவிலான டிஜிட்டல் அதிகாரமளித்தல் ஆகியவற்றை ஊக்குவிப்பதற்கான டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பில் (DPI) இது கவனம் செலுத்துகிறது.
இது டிஜிட்டல் அணுகல், திறன்கள் மற்றும் சேவைகளை விரிவுபடுத்துவதற்கான DPI 2.0 (2025-2035) மற்றும் கண்டுபிடிப்புகள் சார்ந்த பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கான DPI 3.0 (2035-2047) என இரண்டு கட்டங்களைக் கொண்டுள்ளது.
டிஜிட்டல் அடையாளம் மற்றும் பணப் பரிவர்த்தனைகளை மேம்படுத்திய ஆதார் மற்றும் UPI போன்ற வெற்றிகரமான தளங்களின் அடிப்படையில் இது கட்டமைக்கப் பட்டுள்ளது.
சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (MSMEs), விவசாயம், கல்வி மற்றும் சுகாதாரம் ஆகியவற்றை மேம்படுத்துவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.