DRAVYA வலை தளமானது, 2025 ஆம் ஆண்டு செப்டம்பர் 23 ஆம் தேதியன்று தேசிய ஆயுர்வேத தினத்தன்று தொடங்கப்பட்டது.
இது ஆயுர்வேதப் பொருட்கள் மற்றும் தயாரிப்புகளின் மிகப் பெரிய தரவுத்தளமாகும்.
DRAVYA என்பது ஆயுஷ் பொருட்களின் பல்துறை அளவுருவிற்கான டிஜிட்டல் மீட்டெடுப்புச் செயலி என்பதைக் குறிக்கிறது.
இது பாரம்பரிய ஆயுர்வேத பாடப் புத்தகங்கள், சமகால அறிவியல் இலக்கியங்கள் மற்றும் கள ஆய்வுகளிலிருந்து தரவை எளிதாக அணுக உதவுகிறது.
ஆயுஷ் அமைச்சகத்தின் கீழ் உருவாக்கப்பட்ட இது மாணவர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் அந்தத் துறையில் உள்ள ஆராய்ச்சியாளர்களுக்கு ஒரு விரிவான வளமாக செயல் படுகிறது.