கரக்பூரின் இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகக் குழுவானது, நகர்ப்புறப் பசுமை சார் போக்குவரத்திற்கான மாற்றுப் பாதைத் திட்டமிடல் (அல்லது DRUM) என்ற வலை தளத்தினை உருவாக்கியுள்ளது.
கூகுள் வரைபடத்தைப் போன்ற இந்த ஒரு செயலியானது காற்றின் தரநிலை மற்றும் ஆற்றல் திறன் அடிப்படையில் பயனர்கள் அவர்களது பாதைகளைத் தேர்ந்தெடுக்க அனுமதிக்கும் கூடுதல் அம்சத்துடன் செயல்படும்.
DRUM செயலியானது, பயனர்களுக்கு மிக குறுகிய, வேகமான, குறைந்த அளவு காற்று மாசுபாடு வெளிப்பாடு கொண்ட பாதை (LEAP), குறைந்த ஆற்றல் நுகர்வுப் பாதை (LECR), மற்றும் நான்கு காரணிகளின் கலவையைக் கொண்ட பரிந்துரைக்கப்பட்ட பாதை என ஐந்து விதமான பாதை விருப்பத் தேர்வுகளை வழங்குகிறது.
LEAP பாதையானது மத்திய டெல்லியில் பயண நேரத்தை 40% அதிகரித்த போதிலும், பயணத்தின் போதான மாசு வெளிப்பாட்டை 50 சதவீதத்திற்கும் மேலாகக் குறைத்தது.