TNPSC Thervupettagam

E - BCAS திட்டப் பயிற்சித் தொகுதி

January 3 , 2020 2041 days 853 0
  • விமானப் பயணப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி உயிர்த் தரவினால் செயல்படுத்தப்படும் ஒரு மையப்படுத்தப்பட்ட அணுகல் கட்டுப்பாட்டு அமைப்பு (Centralised Access Control System - CACS) மற்றும் ‘E - BCAS திட்டப் பயிற்சித் தொகுதி’ ஆகியவற்றை புது தில்லியில் தொடங்கினார்.
  • இந்த 2 திட்டங்கள் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காகவும் விமான நிலையங்களில் தொழில் தொடங்குவதை எளிதாக்குவதற்காகவும் தொடங்கப் பட்டுள்ளன.
  • CACS திட்டமானது விமான நிலையங்களில் பணியாளர்கள் மாற்ற செயல்முறையை டிஜிட்டல் மயமாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • E - BCAS தொகுதி மூலம், 1.5 லட்சத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் நேரடிச் சேவையிலிருந்து டிஜிட்டல் தளத்திற்கு மாற்றப்பட இருக்கின்றனர்.
  • இது இந்திய அரசாங்கத்தின் மின் ஆளுகை முயற்சியின் கீழ் "காகிதமற்ற அலுவலை" அடைவதற்குத் திட்டமிட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்