TNPSC Thervupettagam

e-FAST இந்தியா உச்சி மாநாடு 2026

September 11 , 2026 2 days 50 0
  • நிதி ஆயோக்கின் e-FAST இந்தியா 2026 ஆம் ஆண்டில் நடைபெற்ற 5 ஆவது e-FAST இந்தியா உச்சி மாநாட்டில் தூய்மையான போக்குவரத்தை ஒருங்கிணைப்பதற்கான தளத்தை (PACT) மற்றும் ZET சந்தையை அறிமுகப்படுத்தியது.
  • e-FAST இந்தியா என்பது நடுத்தர மற்றும் கனரக வாகனங்களை மையமாகக் கொண்டு சரக்குப் போக்குவரத்தை மின்மயமாக்குவதற்கான இந்தியாவின் முதல் தேசிய அளவிலான கூட்டுத் தளமாகும்.
  • PACT ஆனது பூஜ்ஜிய உமிழ்வுச் சரக்குந்துப் (ZET) பயன்பாட்டை ஆதரிப்பதற்காக சரக்கு அனுப்புநர்கள் மற்றும் தளவாட நிறுவனங்களிடமிருந்து சரக்குத் தேவைகளை ஒருங்கிணைக்கிறது.
  • ZET சந்தையானது சரக்குந்து உற்பத்தியாளர்கள், வாகனக் குழுமங்களை இயக்குபவர்கள், மின்னேற்ற சேவை வழங்குநர்கள் மற்றும் தூய்மையான தொழில்நுட்ப நிறுவனங்களை இணைக்கிறது.
  • இந்த முன்னெடுப்பானது சாலைச் சரக்குப் போக்குவரத்தை கரியமில வாயு அற்றதாக மாற்றுவதையும், 2070 ஆம் ஆண்டிற்குள் நிகர-பூஜ்ஜிய உமிழ்வை எட்டும் இந்தியாவின் இலக்கை ஆதரிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்