மத்திய அரசானது, மின்னணு தேசிய வேளாண் சந்தை (eNAM) தளத்தில் ஏழு புதிய வேளாண் பொருட்களைச் சேர்த்துள்ளது.
அவை: கரும்பு, மார்ச்சா அரிசி, கட்டர்னி அரிசி, ஜர்தாலு மாம்பழம், ஷாஹி லிச்சி, மகஹி பான் மற்றும் பனாரசி பான் ஆகியனவாகும்.
eNAM தளத்தில் உள்ள மொத்தத் தயாரிப்புகளின் எண்ணிக்கை தற்போது 238 ஆக அதிகரித்துள்ளது.
இந்தியாவில் வெளிப்படையான, தரம் சார்ந்த மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த வேளாண் வர்த்தகத்தினை ஊக்குவிப்பதற்காக எண்ணிம வர்த்தகத் தளமான eNAM ஆனது 2016 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.