மத்திய சுகாதாரத் துறை அமைச்சகமானது இந்திய அரிய ரத்தத் தானம் செய்பவர்கள் பதிவேட்டை (RDRI), e-Rakt Kosh எனும் தேசிய இரத்த வங்கி மேலாண்மை தளத்துடன் ஒருங்கிணைக்கத் திட்டமிட்டுள்ளது.
e-Rakt Kosh ஆனது தேசிய சுகாதாரத் திட்டத்தின் (NHM) கீழ் உருவாக்கப்பட்டது.
இது இரத்த வங்கிகள், இரத்தம் கிடைக்கும் தன்மை மற்றும் இரத்த தான முகாம்கள் பற்றிய நிகழ்நேரத் தகவல்களை வழங்குகிறது.
இரத்தக் குழுவானது, மிகவும் இணக்கமான நன்கொடையாளர்களுக்கான அணுகலை எளிதாக்குவதன் மூலம் பாம்பே, Rh-null மற்றும் P-Null போன்ற சில அரிய இரத்த வகைகளைக் கொண்ட மக்களுக்குப் பயனளிப்பதை இது நோக்கமாகக் கொண்டு உள்ளது.
RDRI ஆனது இந்திய மருத்துவ ஆராய்ச்சிச் சபையின் தேசிய குருதிக் கோளாறு சார்-தடுப்பாற்றலியல் நிறுவனம் (NIIH) மற்றும் நான்கு கூட்டு நிறுவனங்களால் உருவாக்கப் பட்டது.