2.17 கோடி பேர் என்ற இலக்கில் 93.13 லட்சம் பதிவுகளுடன் தமிழ்நாடு e-Shram இலக்கில் 43% இலக்கினை மட்டுமே அடைந்துள்ளது.
e-Shram வலை தளமானது, 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில், மத்திய அரசினால் தொடங்கப் பட்டது.
இது வலை தளத் தொழிலாளர்கள், இணையவழி மூலம் திரட்டப்பட்ட தொழிலாளர்கள் மற்றும் தற்காலிக தொழிலாளர்களை ஒரு மையப்படுத்தப்பட்ட நலச் சேவை கட்டமைப்பிற்குள் கொண்டுவருகிறது.
இதில் பதிவு செய்யப்பட்ட நபர்கள் பிரதான் மந்திரி ஆயுஷ்மான் பாரத் சுகாதாரத் திட்டத்தின் கீழ் 5 லட்சம் ரூபாய் மருத்துவக் காப்பீடு உள்ளிட்ட அரசாங்க ஆதரவு சலுகைகளுக்கு தகுதியுடையவர்களாகிறார்கள்.
தமிழ்நாட்டில் பெண்களின் பதிவுகள் (59.4 லட்சம்) ஆனது ஆண்களின் பதிவு எண்ணிக்கையை விட (33.7 லட்சம்) அதிகமாகும்.
மொத்த e-Shram பதிவுகளில் தமிழ்நாடு முதல் 10 மாநிலங்களுக்குக் கீழே அடுத்த இடத்தில் உள்ளது.
6.66 கோடி இலக்குக்கு எதிராக 8.39 கோடி தொழிலாளர்கள் பதிவு செய்யப் பட்டு உள்ளதுடன், உத்தரப் பிரதேச மாநிலமானது, e-Shram பதிவுகளில் முதலிடத்தில் உள்ளது.