தெலங்கானா மாநில அரசானது தெலங்கானா போதைப்பொருள் எதிர்ப்பு வாரியத்தினை (TGANB) EAGLE எனப் படும் சிறப்பு அமலாக்கப் பிரிவாகத் தொடங்க உள்ளதாக அறிவித்துள்ளது.
EAGLE என்பது போதைப் பொருள் சட்ட அமலாக்கத்திற்கான மேம்பட்ட நடவடிக்கைக் குழு (Elite Action Group for Drug Law Enforcement) என்பதைக் குறிக்கிறது.
இது தெலங்கானாவில் கஞ்சா சாகுபடியைக் கண்டறிந்து அழித்தல் மற்றும் மாநில எல்லைகளில் கடத்தல் நடவடிக்கைகளைத் தடுத்தல் போன்ற நடவடிக்கைகளை மேற் கொள்ளும்.