இது "சட்டரீதியான வேலைவாய்ப்புகளுக்குப் பச்சை அட்டைகளுக்கான சம அணுகல் சட்டம்" (Equal Access to Green cards for Legal Employment Act) என்று அழைக்கப்படுகிறது.
இது வேலைவாய்ப்பு அடிப்படையிலான பச்சை அட்டையில் ஒரு நாட்டிற்கான வரம்பை (country cap) அகற்றுவதற்காகக் கொண்டு வரப்பட்டுள்ளது.
பச்சை அட்டைகளுக்காக வேண்டி பல ஆண்டுகளாக காத்திருக்கும் இந்தியத் தகவல் தொழில்நுட்ப வல்லுநர்களுக்குப் பயனளிப்பதற்காக இது அறிமுகப் படுத்தப்பட்டு உள்ளது.
வேலைவாய்ப்பு அடிப்படையில், கிடப்பில் கிடக்கும் 75 சதவிகித விசாப் பயணச் சீட்டுக்கள் (பயண அனுமதிச் சீட்டு) இந்தியர்களுடையதாகும்.
இது அமெரிக்க நாட்டின் பணியளிப்பவர்கள் புலம்பெயர்ந்தோரை அவர்களின் பிறப்பிடம் கருதாமல் அவர்களின் தகுதியின் அடிப்படையில் பணியமர்த்துவதில் கவனம் செலுத்த அனுமதிப்பதன் மூலம் இது அமெரிக்கப் பொருளாதாரத்திற்கு மிகுந்த அளவில் பயனளிக்கும்.