EAT-Lancet ஆணையமானது, ஆரோக்கியமான, நிலையான மற்றும் சரியான உணவு முறைகள் குறித்த அதன் 2025 ஆம் ஆண்டு அறிக்கையை வெளியிட்டது.
மனித ஊட்டச்சத்தைப் புவியின் நலத்துடன் இணைக்கும் புதுப்பிக்கப்பட்ட அறிவியல் ஆதாரங்களை இந்த அறிக்கை வழங்குகிறது.
ஊட்டச்சத்துத் தேவைகளை சுற்றுச்சூழல் நிலைத்தன்மையுடன் சமநிலைப்படுத்த இது புவி நலம் சார் உணவு முறையைத் திருத்துகிறது.
நிலப் பயன்பாடு, நீர் மற்றும் பசுமை இல்ல வாயுக்கள் போன்ற புவி எல்லைகளை கடப்பதற்கு தற்போதைய உணவு உற்பத்தி எவ்வாறு பங்களிக்கிறது என்பதை இது மதிப்பிடுகிறது.
உணவு சார் நீதியை இந்த ஆணையம் வலியுறுத்தி, உணவு அணுகல் மற்றும் ஊட்டச்சத்து ஆகியவற்றில் உள்ள சமத்துவமின்மையை நிவர்த்தி செய்கிறது.
ஊட்டச்சத்துக் குறைபாடு மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பைக் குறைப்பதில் அரசாங்கங்களுக்கு வழிகாட்டுவதற்கான புதிய மாதிரித் தரவும் இதில் அடங்கும்.
உலகளாவிய, பிராந்திய மற்றும் உள்ளூர் அமலாக்கத்திற்கான நடைமுறைக் கொள்கை செயல் திட்டங்களை இந்த அறிக்கை முன்வைக்கிறது.
நிலையான உணவுமுறைகள் மனித ஆரோக்கியத்தையும் புவி சுற்றுச்சூழல் அமைப்புகளையும் பாதுகாக்க முடியும் என்பதை ஆணையம் எடுத்துக்காட்டுகிறது.